அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருவழுந்தூர் (தேரெழுந்தூர்)
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 7
திருவுக்கும் திருவாகிய செல்வா !
தெய்வத்துக்கரசே ! செய்யகண்ணா !
உருவச் செஞ்சுடராழி வல்லானே !
உலகுண்ட ஒருவா ! திருமார்பா !
ஒருவற்காற்றி உய்யும்வகை என்றால்
உடனின்றைவர் என்னுள் புகுந்து ஒழியாது
அருவித் தின்றிடவஞ்சி நின்னடைந்தேன்,
அழுந்தூர் மேல்திசை நின்றவம்மானே.
(பெரிய திருமொழி - 7-7-1)
அருளியவர்: திருப்பாணாழ்வார்
திவ்ய தேசம்:
திருவரங்கம் (ஸ்ரீரங்கம்)
பாசுர எண்: 927
அமலனாதிபிரான்
உவந்த வுள்ளத்தனா யுலகமளந் தண்டமுற*
நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத் தம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்ற தாமென சிந்தனையே !
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற*
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரைக்*
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான்* அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என சிந்தனையே !
அருளியவர்: திருமங்கை ஆழ்வார்
திவ்ய தேசம்:
திருக்குடந்தை
பாசுர எண்: 0
பெரிய திருமொழி
: 10
கிடந்த நம்பி குடந்தை மேவிக் கேழலாய் உலகை
இடந்த நம்பி, எங்கள் நம்பி, எறிஞர் அரணழியக்
கடந்த நம்பி கடியார் இலங்கை, உலகை ஈரடியால்
நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே.
(பெரிய திருமொழி - 6.10.1)
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்:
திருவேங்கடம் (திருப்பதி)
பாசுர எண்: 0
திருவாய்மொழி
: 3
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே.
(திருவாய்மொழி - 3.3.8)
தொடர்பு கொள்ள
Dear Reader,
To contact us please drop an e-mail to any one of the e-mail addresses mentioned below.
meeradevotees@gmail.com
radha.services@gmail.com
ramanujaservices@gmail.com